Saturday, March 29, 2008

GAMES SETUP"S













GAMES SETUP"S


பங்குனி உத்திரத்திற்கு
நீயும் வருவாய் என
வந்திருந்தேன்.


செல்லியம்மன் சிரிப்பை ஒத்த
உன் கன்னக்க்குழி சிரிப்பை
மறக்க செய்தது நாட்கள்.

மழை நாட்களில் மேய்த்த
ஆடு மாடுகள் அற்ற ஊர்
ஊராக இல்லை.

பச்சை மல்லாட்டை
சுட்டு தின்கிற
ஆட்டுக்காரப்பிள்ளைகளை
காணவில்லை.

ஓடி ஒளியிராட்டம்,
உப்பாள் சரணா,
விளையாட
யாருக்கும் தெரியவில்லை.

திருப்பூருக்கும்,சென்னைக்கும்
வேலைக்கு போய்விட்ட
பசங்க பிள்ளைங்க எல்லாம்
விருந்தாளியா
விடுமுறைக்கு
வந்து இருக்கிறார்கள்.


எல்லார் கையிலும்
செல்போன் இருக்கிறது -
அதில் இருக்கிற
GAMES SETUP - ல்
கிரிக்கெட்-கேரம்போர்டு
ஆடத்தெரியுமா என கேட்டு
சொல்லிக்கொடுத்தது உன் மகள் - அதே
செல்லியம்மன் சிரிப்பை ஒத்த
சிரிப்போடு...

வீரமணி


நன்றி




மொழி தெரியாது என்றாலும்
நன்றி சொல்லியாக வேண்டும்.
அடுப்படிவேலையொழித்து
திரும்பும்வரை
சன்னல் வழியாக
குழந்தைக்கு
விளையாட்டுக்காட்டிய
அணிலுக்கு.
வீரமணி

Saturday, March 15, 2008

அடங்க மறுக்கும் திமிர்

அடங்க மறுக்கும் திமிர்

















1

வெயிலேறி
காய்வெடிப்பதற்குள்
கருக்கள் பனி ஈரத்தோடு
எரங்காட்டுக்கு
பயிர் அரிக்கப் போகும்
அக்காள்களின் வயதறியாமல்
அப்பன்கள் குடிக்க போகிறார்கள்
ஒவ்வொரு அந்தியிலும்.














2

விறகுடைக்க
வந்தவெட்டியானின்
பசிஅறியாமல்
பழைய கஞ்சியை
ஊற்றினாள்
ஆண்டைவீட்டு அம்மா.
மூச்சிரைக்க
பிளந்து போட்டவனின்
முன்னால்
விறகுகள் கிடக்கிறது
அடித்து எரிய வைக்க இருக்கும்
ஆண்டைகளின்
மண்டை ஓட்டு கபாலமொத்து.















3

அரைகுறை
ஆடையுடன்வரும்
பெண்களைவேடிக்கை
பார்த்தபடி
"காஃபி டே"யில் குடித்த
காஃபியின் விலை
முப்பது ரூபாய்...
கருக்கலில் சென்று
கரும்புக்குகளை
வெட்டிஉச்சி வெய்யிலில்
வீடுதிரும்பும்அம்மாவுக்கு
கூலிஇருபைத்தைந்து ரூபாய்.

4
துளி நுனி
கொழுந்துஇல்லாமல்
பட்டுப்போய் நிற்கிறது
வேம்பு ,துளசி,நொச்சி
3டி மூவ்மென்டில்
டீ.வீ. பெட்டிக்குள்
உலா வருகிறது
வேம்பு,புதினா,
துளசியைகொண்டு
தயாரானசோப்பு விளம்பரம்.

நன்றி;கீற்று.காம் &TREKEARTH.COM